அமெரிக்க நாடுகளில் ஒன்றான நெவாடாவில் உள்ள லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது.
பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமான இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு புகை எழுந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, என்ஜினில் தீ பரவத் தொடங்கியது. இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் தரையிறக்கி, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
అమెరికన్ ఎయిర్లైన్స్ విమానంలో మంటలు
— Telugu Scribe (@TeluguScribe) June 26, 2025
విమానం గాల్లో ఉండగా ఇంజన్లో చెలరేగిన మంటలు
వెంటనే అప్రమత్తమై లాస్వెగాస్ ఎయిర్పోర్టులో తిరిగి ల్యాండింగ్ చేసిన పైలట్
ప్రయాణికులు సురక్షితం pic.twitter.com/Q6vjsclK7P
இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானத்தில் கோளாறு ஏற்பட்ட போதிலும் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த எங்கள் விமானக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை விரைந்து செயல்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.