30 கோடி ரூபாய் பெறுமதியான பொக்கிஷங்கள் மீட்பு!சந்தேக நபர் கைது

மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் ரூ. 30 கோடி ரூபாய் மதிப்புள்ள கஜமுத்துக்கள் மீட்பில் சந்தேகநபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒரே இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டிலேயே இதுவே மிகப்பெரிய கஜமுத்துத் தொகுதி என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவரிடம் இருந்து 30 கஜமுத்துக்கள், சிறுத்தையின் தோல், யானைத் தந்தம், சிறுத்தையின் எண்ணெய், கருங்காலி மரம் மற்றும் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கணிசமாக பாதுகாக்கப்படும் தம்பு (Dambu) தாவரத்தின் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, சந்தேகநபர் யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி பல்வேறு கலைப் பொருட்களை தயாரித்து நீண்டகாலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வனவிலங்கு அதிகாரிகளின் பொறுப்பில் வைத்து விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

sajith premadasa
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்?அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்!
Commander Buddhika Sampath
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: நிராகரித்தது கடற்படை!
iran war ship
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்?
jaffna news
யாழில் காணாமல் போன மீனவர்கள் - கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எழுந்துள்ள குற்றச்சாட்டு!
gold price
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!
iran ship
விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! மீட்கப்பட்டோர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு