பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!

பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெறவிருந்த விரிவுரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத இறுதியில் நாமல் ராஜபக்சவின் பிரித்தானிய விஜயத்தின் போது, ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், பிரித்தானியா முழுவதும் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்கள் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்பதற்கு கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.

அதன்போாது, ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் மாணவர் சங்கங்களும் பிரிட்டனின் தமிழ் இளைஞர் அமைப்பும் (TYO UK) நாமலுக்கு வழங்கப்பட்ட பேச்சு வாய்ப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு அழைப்பு விடுத்தன.

இந்த நிலையில், எதிர்ப்புகள் மற்றும் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஏற்பாட்டாளர்கள் கேம்பிரிட்ஜ் யூனியன் விரிவுரையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்சவிடமிருந்து எவ்வித பதில்களும் இதுவரை வெளியாகவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!