2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் யோசனை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வின் மூன்றாம் நாள் இன்று (12) மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்றது.
