இன்று(09) காலை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபரை மோதி விழுத்திவிட்டு அவர்மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்நிலையில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
