🔴 VIDEO யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : விசாரணையில் வெளிவந்த தகவல்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி வழியாக இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.

எனினும், கட்டளையை மீறி குறித்த வாகனம் மண்டைத்தீவு நோக்கி பயணித்துள்ளது.

இதன்போது, மண்டைத்தீவு பகுதியில் கடமையில் ஈடுபட்ட ஊர்காவற்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனத்தை நிறுத்துமாறு காவல்நிலைய பொறுப்பதிகாரியும் கட்டளையிட்டுள்ளார்

எனினும், அதனையும் மீறி அந்த சிற்றூர்தி பயணிக்க முயற்சித்துள்ளது.

இதன்போதே அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த வாகன சாரதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது, குறித்த வாகனத்தில் பயணித்த மேலும் இரண்டு பேர் ஊர்காவற்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!