கொழும்பு – கொள்ளுப்பிட்டி கடலில் மூழ்கிய நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டதுடன் அவரின் இரண்டு மாத குழந்தையை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்றையதினம் குறித்த பெண் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவை சேர்ந்த குறித்த பெண் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கொழும்பு நோக்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் நுவரெலியா பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது.
குழந்தையுடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றாரா அல்லது அந்தப் பெண் தனது குழந்தையை கடலில் வீசிவிட்டாரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.