புத்தளத்தில் தொலைந்த பணப் பையை கண்டெடுத்து யாழ்ப்பாணத்தில் ஒப்படைத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி!

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார்.

பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கைப்பைக்குள் இருந்த ஆவணங்களை கொண்டு அது யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை நேற்று(15) தொலைத்த பணப்பை உரிமையாளரிடம் கையளித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!