திருடப்பட்ட துப்பாக்கி! விசாரணையில் சிக்கிய பெண் உள்ளிட்ட மூவர்

மட்டக்களப்பு – புனாணை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டுப் பொருட்கள் வைத்திருந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 3 பேரே நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ம் திகதி வாழைச்சேனை கொழும்பு வீதி புனாணையில் அமைந்துள்ள பூட்டியிருந்த வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள், துளை கருவியான ரில்லர் ஒன்று, எரிவாயு அவன் ஒன்று மின்விசிறி ஒன்று ஆகிய பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த சித்தாண்டி யைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை கைது செய்து விசாரணையில் திருடப்பட்ட துப்பாக்கியை அந்த பகுதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் இருந்து துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து புனாணை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைத்திருந்த மின்விசிறி உட்பட்ட பொருட்களை மீட்டதுடன் திருட்டுப் பொருளை வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!