வவுனியாவில் சோகம்: உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) மாலை குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவராவார். சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ranil
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
accident
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து
anura-julie chung
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
jaffna death
யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
arrest
பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது
kilinochchi
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து 04 பேர் பலி!