முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருவர் கைது!

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா, செட்டிகுளத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிர்வு பொலிசார் தெரிவித்தனர்.

திங்கள் கிழமை கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் மற்றும் துட்டுவாகை ஆகிய பகுதிகளில் இரு வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?