நேற்று (17) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, ராஜித சேனாரத்ன, நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, கரு ஜயசூரிய, அஜித் நிவார்ட் கப்ரால், ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜயசேகர, அகில விராஜ் காரியவசம், எரான் விக்ரமசிங்க, கவிந்த ஜெயவர்தன, இம்தியாஸ் பாகிர் மாகார், சரித ஹேரத், சுசில் பிரேமஜயந்த, ஆசு மாரசிங்க, யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அவர்கள் வட்ட மேசைகளில் அமர்ந்து நீண்ட விவாதங்களை நடத்தியதாகவும் அறியப்படுகிறது.
இந்தத் திருமணம் பாரடைஸ் இன் பொல்கொட விருந்தகத்தில் நடைபெற்றது. இந்த இரவு விருந்துபசாரம் ஊடகவியலாளர் ஒருவரின் மகனின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.