ஹட்டன் கல்வி வலய கோட்டம் – 2க்குட்பட்ட நோர்வூட் ஆரம்பப்பிரிவு தமிழ் வித்தியாலய மாணவன் சுரேஸ் தரின்கெளசான், 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளை விட அதிகமாக 184 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவனை பாடசாலை அதிபர் ஆர். யோகராஜ் வாழ்த்தியதோடு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.
இதேவேளை, குறித்த பாடசாலையில் பலரும் வெட்டுப்புள்ளிகளை மீறி சிறந்த சித்தி பெற்றுள்ளனர். அவர்கள்:

- வினோதன் மோனிஸ் – 142
- திலகர்மணி லக்சின் – 136
- மணிகண்டன் தேனுஸ் – 151
- விஸ்வராஜா லயோதிகன் – 151
- தொண்டமான் கேசோரி – 152
- பிரதீப் ரிஸ்மி – 138
- ரெங்கநாதன் ஹரித்ரவதனா – 152
- ஹய்தா அப்துல் சமித் – 140
- விஸ்வநாத் மகிஷனா – 135
- ஞானகுமார் அவந்திகா – 155
- யதீஸ்குமார் அலைனா கேசி – 153
- கலைவானன் லக்ஸனியா – 134
- லிங்கநாதன் ஜேசுவரன், ஹோலினா பிரேவ் – 138
- நெவில் பேணரான்டோ, ரொஸ்சின் ஜெசிகா – 152
- கனகராஜா கபிஸ்கா – 133
- ஞானகுமார் ஆத்மிக்கா – 142
- லிங்கேஸ்வரன் யசிக்கா – 151
- சிமியோன் பிரவினா – 132
- பேசில் பெசில்சந்ரகாசன், அனலியா பிரதிக்ஸா – 151
- பிரபாகரன் சேஸ்வன் – 133
- கார்த்திகேசன் கெஸ்மீரா ஜொய்சி – 141
- சந்ரகுமார் தினுசியானி – 135
- திருச்செல்வம் சஸ்விதா – 139
மொத்தமாக 24 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாகப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றாலும், இன்றுவரை இப்பாடசாலைக்கு நிலையான கட்டிடம் இல்லையென பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாடசாலைக்கான காணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது தற்காலிக மண்டபம் ஒன்றிலும், தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட நான்கு வகுப்பறைகளிலும் கற்பித்தல் நடைபெற்று வருகின்றது.
நோர்வூட் ஆரம்பப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.