🔴 VIDEO திடீரென சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்- வைரல் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலத்தின் குப்த்காஷி பகுதியில் இன்று காலை கேதர்நாத் நோக்கி புறப்பட்ட ஒரு தனியார் ஹெலிகாப்டரில் திரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாகக் கவனித்த விமானி, சிறப்பாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார். இந்த அதிரடியான நடவடிக்கையால், ஹெலிகாப்டரில் பயணித்த ஐந்து பயணிகளும் எந்தவிதமான காயமும் இல்லாமல் உயிர்தப்பினர்.

எனினும், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டதால், மீட்புக்குழுவினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தரையிறக்கும் நேரத்தில் ஹெலிகாப்டரின் வால் பகுதி சாலையில் நின்ற கார் ஒன்றுடன் மோதி சேதமடைந்தது. சம்பவத்திற்குப் பிறகு வந்த அதிகாரிகள் ஹெலிகாப்டரை அப்புறப்படுத்தி, பாதிக்கப்பட்ட காரை அகற்றினர். போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வானில் பயணித்த ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!