தம்பதிக்கு , என்னதான் பிரச்சினை? கழுத்தை வெட்டி கொலை செய்யும் அளவுக்கு.

இப்படி இருந்த இந்த தம்பதிக்கு , என்னதான் பிரச்சினை என்றாலும் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்யும் அளவு அந்த கொடூர மனம் எப்படி வந்தது ?

கொலை செய்வது கூட ஒரு கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு நடக்கலாம் ஆனால் கொலை செய்த பின் தலையை வெட்டிய எடுத்துக்கொண்டு பொலிஸ் ஸ்டேசன் போவது என்பது மனத்தில் கொடூரம் ஊறிப்போன ஒருத்தரால்தான் முடியும்.

என்ன பிரச்சினை என்றாலும் , பேசி முடிவெடுத்து பிரிந்து போங்கள்.

இந்த கொலைக்கான காரணத்தை ஆராயாதீர்கள். அவை பற்றி எழுதவும் வேண்டாம்.

யார் என்ன செய்தாலும் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிணக்குகளுக்கு கொலை தீர்வல்ல.

கொலை மட்டுமல்ல ஒருத்தரை ஒருத்தர் முரண்டு பிடிச்சுக் கொண்டு மாறி மாறி அடிபடுவதும் கூட தீர்வல்ல. குடும்ப வாழ்க்கை என்பது சேர்ந்து சந்தோசமாக வாழ்வதுதான்.

அதனால் முதலில் பார்ட்னரை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.பழகிவிட்டோம் , லவ் பண்ணி விட்டோம் , வீட்டில் பேசி வைத்து விட்டார்கள் இனி பிரிந்தால் ஊர் என்ன சொல்லும் என்று கல்யாணம் காட்டாதீர்கள்.

முரண்பாடுகளை தீர்க்க கல்யாணம் தீர்வல்ல.
கல்யாணம் என்பது முதல் சில வருடங்களுக்கு பல அழுத்தங்களை கொண்டு வரும் நிகழ்வு. அதனால் ஏற்கனவே பிணக்குகள் உள்ளவர்கள் கல்யாணம் முடித்தால் பிரச்சினை கூடுமே தவிர குறையாது.

அடுத்து பிள்ளை பிறந்தால் பிரச்சினை குறையும் என்று பிள்ளை பெறாதீர்கள். பிள்ளை என்பது முதல் சில வருடங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம். அந்தக் காலத்தில்தான் பிரச்சினைகள் இன்னும் அதிகரிக்கும்.

இதையெல்லாம் சமாளித்து சந்தோசமாக வாழ ஒருவரை ஒருவர் நேசிக்கும் இருவரால் தான் முடியும். அதையும் தாண்டி பல பிரச்சனைகள் வரலாம். அப்போது பேசி பிரிந்து விடுங்கள்.

பிரிந்தால் ஊர் என்ன பேசும் என்று நினைக்காதீர்கள். இந்த ஊர் நீங்க நல்லா இருந்தாலும் பேசும். பிரிந்தாலும் பேசும்.

கலாச்சாரம் அது இது என்று கொண்டு வருபவர்களை கண்டு கொள்ளாதீர்கள்.

முடிந்த வரை நல்ல துணையை கண்டு பிடிங்கள். திருமணத்திற்கு பின் சரிவர வில்லையா சமூகத்தைப் பற்றி யோசிக்காமல் பிரிந்து விடுங்கள்.

பிரியும் போதுகூட சும்மா லோயருக்கு காசை கொட்டி குடுக்காமல் இருவரும் பேசி வழக்குகளில் முரண்படாமல் பிரிந்து போய் அடுத்த கட்ட வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

வவுனியாவில் ஆசிரியையின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!