இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!

இலங்கையில் 2020 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் குறைந்த வருமானப் பிரிவுகளுக்குச் சென்றுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் குடும்ப நுகர்வுச் செலவுகள் 2025 ஆம் ஆண்டில் 9 இலட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளன.

எனினும், உணவு, வீடமைப்பு மற்றும் சுகாதாரத்திற்கான செலவுகள் மொத்தச் செலவில் 58 சதவீதமாக அதிகரித்துள்ளன.

நாட்டின் நுகர்வுச் செலவில் 70 சதவீதத்தை நடுத்தர வருமானக் குடும்பங்கள் மேற்கொள்கின்றன.

இதேவேளை, வசதி படைத்த குடும்பங்கள் மேல் மாகாணத்தில் அதிகளவில் வசிப்பதாகவும், நடுத்தர வருமானக் குடும்பங்களில் 56 சதவீதமானவை கிராமப்புறங்களில் உள்ளதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்