சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச மட்டத்திலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரர் ஆகியோரினால் ஒப்பமிடப்பட்ட இந்தக் கடிதம், தென்னிலங்கை பிரதான சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித தேரரினால் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, இந்து சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்து குருமார் சங்கத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான சிவஸ்ரீ கே.வி.கே. வைதீஸ்வர குருக்களினாலும் மற்றொரு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாகொட சந்தவங்சி தேரர், வேபடைர தம்மசிறி தேரர், இந்து குருமார் சங்கத்தின் உறுப்பினர் சிவஸ்ரீ குகதாச குருக்கள், சட்டத்தரணி தனுஜா நவரத்ன மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆர். ஏ. அமில சஞ்சீவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!