புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்

வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் தந்தையும், ஒரு வயது நிரம்பாத குழந்தையும் பலியாகியுள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09.10) காலை இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து அனந்தர் புளியங்குளம், சமளங்குளம் வயலில் நெல் விதைப்பதற்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை, தாய், ஒரு வயது நிரம்பாத குழந்தை உள்ளிட்டவர்கள் புளியங்குளம், புதூர், 207வது மைல் கல் அருகில் வாகனம் ஒன்றை முந்த முயற்சித்த போது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினார்கள்.

விபத்தில் காயமுற்றவர்களை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றில் ஏற்றி புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளார்கள்.

தந்தை மற்றும் குழந்தையின் உடலம் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த தாயார் நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பாடசாலை மாணவர்களில் இருவர் விபத்தை பார்வையிட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

விபத்தில் மரணமடைந்த குழந்தை இம்மாதம் 23ம்திகதி தனது முதலாவது அகவையைப் பூர்த்தி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்