பொரளையில் பரபரப்பு: பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

பொரளை வார்ட் பிளேஸில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (23) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த ஹோட்டலுக்குள் மூன்று வெளிநாட்டவர்கள் இருந்துள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகப் பொரளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அங்கிருந்த மேலும் சிலர் தீயின் புகையை சுவாசித்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் அல்லது ஏற்பட்டுள்ள சொத்து சேதங்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!