மதுரு ஓயாவில் அதிரடி: ‘மித்ர சக்தி XII – 2026’ பயிற்சியில் இணைந்த இலங்கை – இந்தியப் படைகள்

இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினருக்கு இடையிலான 12ஆவது கூட்டு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி XII – 2026’ மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்று வருகின்றது.

நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமான இந்த 14 நாட்கள் கொண்ட பயிற்சி, எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதில் 170 இந்தியப் பாதுகாப்புப் படையினரும் இலங்கை இராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

இந்தியப் படையணியில் ராஜ்புதனா ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள் மற்றும் இந்திய வான்படையினரும் இடம்பெற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ், அரை நகர்ப்புறச் சூழலில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திறனை இரு நாட்டு இராணுவத்தினரிடையே மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது நகர்ப்புற ரோந்துப் பணிகள், வாகனத் தொடரணிப் பாதுகாப்பு, வீதித் தடுப்பு நடவடிக்கைகள், பதுங்கித் தாக்குதல்கள், மக்கள் கூட்டத்தைக் கலைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு இராணுவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த தாக்குதல் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை இராணுவத்தின் தகவல்களின்படி, இந்த ஆண்டு பயிற்சியில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான படையணித் தரத்திலான தந்திரோபாயச் செயற்பாடுகள், வான்வழி ஆதரவு மற்றும் ஏனைய போர் உத்திகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் இறுதியில் இரு நாட்டு இராணுவத்தினரும் இணைந்து இறுதிச் செயற்பாட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘மித்ர சக்தி’ கூட்டு இராணுவப் பயிற்சி, ஆண்டுதோறும் இலங்கை மற்றும் இந்தியாவில் மாறிமாறி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!