இலங்கை கடற்பரப்பில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இவ்விபத்து வட அட்சரேகை 06 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32′ அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. 

தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

TINNumber
நவம்பர் 1 முதல் நிதி, சட்ட நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!
MotorTrafficDepartment
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழல்: தரவுகளைத் திரட்டும் வலான ஊழல் தடுப்புப் பிரிவு!
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேலதிக சாட்சி விசாரணை ஆரம்பம்!
PoliceCustodyDeath
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்: இரு சார்ஜன்ட்கள் உட்பட மூவர் சஸ்பெண்ட்
RakithaRajapaksa
விஜேதாச ராஜபக்சவின் மகன் வீட்டை சுற்றிவளைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு: ரகித்த தப்பி ஓட்டம்?
DrMathurakan
உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா வைத்தியர் மதுரகன்