மதவாச்சியில் பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

பூனாவ கடற்படை முகாம் அருகே இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் மரணம்! சாரதியின் தூக்கக் கலக்கத்தால் நேர்ந்த விபரீதம்

மதவாச்சி பூனாவ கடற்படை முகாமுக்கு அருகில் மோட்டார் வாகன சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர்.

அத்துடன் மேலும் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியின் வலது பக்கமாகச் சென்ற மோட்டார் வாகனம், எதிர்த்திசையில் வந்த பேரூந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

TINNumber
நவம்பர் 1 முதல் நிதி, சட்ட நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!
MotorTrafficDepartment
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழல்: தரவுகளைத் திரட்டும் வலான ஊழல் தடுப்புப் பிரிவு!
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேலதிக சாட்சி விசாரணை ஆரம்பம்!
PoliceCustodyDeath
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்: இரு சார்ஜன்ட்கள் உட்பட மூவர் சஸ்பெண்ட்
RakithaRajapaksa
விஜேதாச ராஜபக்சவின் மகன் வீட்டை சுற்றிவளைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு: ரகித்த தப்பி ஓட்டம்?
DrMathurakan
உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா வைத்தியர் மதுரகன்