உணவகங்களில் QR குறியீடு காட்சிப்படுத்தல்: உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கு உடனடி நடவடிக்கை!

கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதாரத் திணைக்களம், தனது அதிகார வரம்பிற்குள் உணவின் தரம் குறித்த முறைப்பாகளைப் பதிவு செய்வதற்காக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இந்தத் திட்டம் வெள்ளவத்தையிலிருந்து பம்பலப்பிட்டிய வரை செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார், இது கொழும்பு 01 முதல் 15 வரை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகார வரம்பில் உள்ள ஒவ்வொரு உணவகத்திலும் தொடர்புடைய QR குறியீட்டைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முறைப்பாடுகளைப் பதிவு செய்ய, அந்த அமைப்பு முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு, வழங்கப்படும் படிவம் நிரப்பப்பட வேண்டும்.

இது சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் நேரடியாகப் பெறப்பட்டு, குற்றச்சாட்டு தொடர்பாக அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும், முறைப்பாளரின் அடையாளம் வெளியிடப்படாது என்றும் கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

மேலும், முறைப்பாடு அளித்த பின்னர், சம்பந்தப்பட்ட உணவை உணவகத்திடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும், ரசீதைப் பாதுகாப்பாக வைக்குமாறும் மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

TINNumber
நவம்பர் 1 முதல் நிதி, சட்ட நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!
MotorTrafficDepartment
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழல்: தரவுகளைத் திரட்டும் வலான ஊழல் தடுப்புப் பிரிவு!
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேலதிக சாட்சி விசாரணை ஆரம்பம்!
PoliceCustodyDeath
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்: இரு சார்ஜன்ட்கள் உட்பட மூவர் சஸ்பெண்ட்
RakithaRajapaksa
விஜேதாச ராஜபக்சவின் மகன் வீட்டை சுற்றிவளைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு: ரகித்த தப்பி ஓட்டம்?
DrMathurakan
உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா வைத்தியர் மதுரகன்