பேஸ்புக், வட்ஸ்அப் ஊடாக முறைகேடு: சந்தேகநபரையைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரியது சம்மாந்துறை காவல்துறை!

பேஸ்புக் , வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக சம்மாந்துறை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் மறைந்திருக்கும் இடம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியைக் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • சம்மாந்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரி: 071 859 1162
  • சம்மாந்துறை காவல் நிலையம்: 067 226 0222

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SriLankaPolice
13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்: 2027க்குள் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை என பொலிஸ் அறிவிப்பு
NamalRajapaksa
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை
Mullaitviu
முல்லைத்தீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்கள்: இலங்கை எல்லை தாண்டி அடித்துச் செல்லப்பட்டதாகச் சந்தேகம்
NegomboPrison
கட்டுப்பாட்டை இழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டும் அதிர்ச்சித் தகவல்கள்
Trincomalee
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
CustodialDeath
பொலிஸ் தடுப்புக் காவல் மரணம்: OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!