முல்லைத்தீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்கள்: இலங்கை எல்லை தாண்டி அடித்துச் செல்லப்பட்டதாகச் சந்தேகம்

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் ஆகியோரே இவ்வாறு காணாமல்போனவர்களாவர்.

காணாமல்போன மீனவர்களையும் அவர்களது படகையும் கண்டறிவதற்காக இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து நேற்று (28) தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

மீனவர்கள் 8 படகுகளில் சென்று தேடுதலில் ஈடுபட்டபோதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை வேளையானதால் கரை திரும்பினர். இருப்பினும், இதுவரை மீனவர்களோ அல்லது படகோ கண்டறியப்படவில்லை.

அர்னாப் புயல் காரணமாக நிலவிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பினால், குறித்த படகு இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி அயல்நாடுகளின் கடற்பரப்பிற்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறும் காணப்படுகிறது.

எனவே இன்றைய தினமும் விமானப்படை மற்றும் கடற்படையின் உதவியோடு தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களும் இன்று காலையில் மீண்டும் தேடுதல் பணியைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காணாமல்போன மீனவர்கள் குறித்த தகவல்களை இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட அயல்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்து, சர்வதேச ரீதியிலான தகவல்பரிமாற்றம் மற்றும் தேடுதல் உதவிகளைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!