நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதற்கமைய, சட்ட மா அதிபரின் ஆலோசனையின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வதற்காக இந்த வழக்கை எதிர்வரும் 2027 பெப்ரவரி 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ‘என்.ஆர். கன்சல்டன்சி’ என்ற நிறுவனத்தில் சுமார் 15 மில்லியன் ரூபாயை முதலீடு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணப்பரிமாற்றம் தொடர்பில் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ள காவல்துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!