அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம், அமெரிக்காவில் வெறுப்பு மிகுந்த செயற்பாடுகளும் பாகுபாடுகளும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இந்திய அமெரிக்கர்களும் இடைக்கால தேர்தல்களில் பங்குபற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த இடைக்காலத் தேர்தலில் 63.16 சதவீதத்துடன் 1,73,106 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய சுப்ரமணியம், விர்ஜீனியா மாகாணத்தின் 10வது நாடாளுமன்றத் தொகுதியை (செனட்) பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இந்திய – அமெரிக்கர் என்கிற தகுதியைப் பெறுகிறார்.
சுப்ரமணியத்தின் தந்தை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையைச் சேர்ந்தவர். அவரது தாய் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் டுலேன் பல்கலைக்கழகம், நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பிரிட்ஸ்கர் சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்து, சட்டத்தரணியாக சேவையாற்றி வருகிறார்.
இவர் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சியின் கீழ் வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராக பணியாற்றினார்.
2029இல் இவர் வர்ஜீனியா பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 – 2024 காலப்பகுதியில் மாநில செனட்டில் பணியாற்றினார்.
இதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், சுகாதாரப் பாதுகாப்பு, மத்திய அரசு ஊழியர்களை நடத்தும் விதம், க்ரீன் கார்ட் நிலுவைப் பிரச்சினைகள், எச்-1பி விசா திட்டம் என்பவற்றை சுட்டிக்காட்டி, ட்ரம்ப் ஆட்சியை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
