முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிற்பகல் 1.23 அளவில் அவர் முன்னிலையாகியுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மீண்டும் அந்தநாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
