- பெற்றோரின் கவனக்குறைவு
- பாடசாலையின் கவனக்குறைவு
- வெளிநாட்டு பணங்கள் அதிக புழக்கத்தில்
- போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு
- அரசியல் சூழ்நிலை
- இவை அனைத்தும்
- இவை அனைத்தும் இல்லை, வேறு காரணங்கள்
உங்கள் கமெண்ட் பேஸ்புக்குள் தெரிவிக்கவும்

வெளியாகிய சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் – மாகாண வாரியான சித்தி சதவீதங்கள் என்ன?
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 73.45% மாணவர்கள் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தமாக 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ தரங்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 ஆகும். இது மொத்த பரீட்சையில் பங்கேற்ற மாணவர்களில் 4.15% ஆகும்.
📍 மாகாண வாரியான சித்தி சதவீதங்கள்
மாகாணம் | சதவீதம் |
---|---|
தெற்கு மாகாணம் | 75.64% |
மேல் மாகாணம் | 74.47% |
கிழக்கு மாகாணம் | 74.26% |
மத்திய மாகாணம் | 73.91% |
சப்ரகமுவ மாகாணம் | 73.47% |
ஊவா மாகாணம் | 73.14% |
வட மேல் மாகாணம் | 71.47% |
வட மத்திய மாகாணம் | 70.24% |
வடக்கு மாகாணம் | 69.86% |
📚 பாட வாரியான சித்தி சதவீதங்கள்
பாடம் | சதவீதம் |
---|---|
கிறிஸ்தவம் | 91.49% |
கத்தோலிக்கம் | 90.22% |
சிங்கள மொழி மற்றும் இலக்கியம் | 87.73% |
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் | 87.03% |
இஸ்லாம் | 85.45% |
பௌத்தம் | 83.21% |
சைவநெறி | 82.96% |
வரலாறு | 82.17% |
ஆங்கிலம் | 73.82% |
அறிவியல் | 71.06% |
கணிதம் | 69.07% |
இதனுடன், எந்த ஒரு பாடத்திலும் சித்தி பெற முடியாத மாணவர்களின் சதவீதம் 2.34% ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.