QR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 4,800 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 4,045 மெட்ரிக் தொன் பெட்ரோல் நுகரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கியூ.ஆர். முறைமை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

மார்ச் மாதத்தில் கிடைக்கவுள்ள மற்றும் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருளின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம் வரை போதுமான எரிபொருள் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்