220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, சொத்துக்கள் அரசுடமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை – சொத்துக்கள் அரசுடமையாக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் 15 குற்றவாளிகளுக்கு மொத்தமாக 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

மேலும், குறித்த 15 குற்றவாளிகளுக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் இன்று முதல் அரசுடமையாக்கப்படுவதாக நிரந்தர மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் சம்பவத்தில் 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட 15 பேருக்கும் 220 வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவர் அடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (22) இரவு தீர்ப்பளித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் 15 பேர் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்கள் (15 பேர்):

  1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
  15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு; ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் (9 பேர்):

  1. முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்)
  2. முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது)
  3. ரஷீத் முகம்மது இப்ராஹிம்
  4. சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம்
  5. முகம்மது முஸ்தபா முகம்மது ரிஸ்வான்
  6. மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா)
  7. முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா
  8. முகம்மது அன்சார்தீன் முகம்மது இல்மி
  9. முகம்மது அக்ரம் அஹக்கம்

சிறைக்காவலில் உயிரிழந்தவர் (1 நபர்):

  • யாசின் பாவா அப்துல் ரவூப் – வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சிறைக்காவலில் உயிரிழந்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

GnanasaraThero
பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரானார் ஞானசார தேரர்!
JohnstonFernando
பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு விசாரணையில் புதிய உத்தரவு!
ShiranthiRajapaksa
விசாரணை அழைப்புக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்றார் ஷிரந்தி ராஜபக்ஷ!
IllegalSandMining
கொடிகாமத்தில் பரபரப்பு: சட்டவிரோத மணல் டிப்பர்கள் மீது அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு; இருவர் கைது
ShiranthiRajapaksa
சிரிலிய சவிய 1 கோடி ரூபாய் நிதி முறைகேடு: ஷிரந்தி ராஜபக்சவிடம் தீவிரமடையும் சிஐடி விசாரணைகள்
FuelPriceRevision
உலகச் சந்தை நெருக்கடி: செப்டம்பரில் எரிபொருள் விலை மாற்றமடையும் சாத்தியம்