மஸ்கெலியா புனித ஜோசப் தேசியக் கல்லூரியின் 36 மாணவர்கள் சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (20) காலை 8.45 மணியளவில், பாடசாலையின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த 96 மாணவர்கள் காலை உணவை உட்கொண்டு வகுப்பறைகளில் இருந்தபோது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 மாணவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதுடன், இரண்டு ஆண் மாணவர்களும் மூன்று மாணவிகளும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
