🔴 PHOTO செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ் – அரியாலை (செம்மணி) – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் 47 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 12 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் (07) முன்னெடுக்கப்பட்டது.

பேராசிரியர் ராஜ் சோமதேவா ஏற்கனவே செய்மதி புகைப்படத்தின் ஆதாரத்துடன் அடையாளப்படுத்திய பகுதியில், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட மாணவர்களினால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் போதும் புதிதாக சில மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதனை விடவும் அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் இருந்து மழை நீர் வடிந்தோடுவதற்காக நேற்றைய தினம் பைக்கோ இயந்திரம் மூலமாக வாய்க்கால் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் போதும் சில மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வாயக்கால் வெட்டும் பணியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறு பிள்ளையின் எலும்புக்கூடு என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியுடன், ஆடைகள், பாதணி, பொலித்தீன் மாலை, மற்றும் நாணயக் குற்றிகள் போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!