56 பேருந்து அனுமதிப்பத்திர ஊழல்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை
சட்டவிரோதமாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!