🔴 PHOTO எச்சரிக்கை – யாழில் கரையொதுங்கும் மர்ம மூலப்பொருட்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேற்படி அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு (வ.கி)  அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் என்பதனை அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!