🔴 PHOTO மாவிட்ட புரத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 06:00 மணிக்கு நடைபெற்றது.

கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து கீரிமலை – மாவிட்டபுரம் வீதி ஊடாக மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலுக்கு சகல உபச்சாரங்களுடன் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்நிகழ்வு நடைபெறாத நிலையில் இம்முறை 35 வருடங்களின் பின் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை மாதம் 23ஆம் திகதி அன்றும் மறுநாள் ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!