🔴 PHOTO ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக இனவெறி பிரச்சாரம்! வெளியான கனடா பிரதமரின் அறிவிப்பு

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் வலியை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் (Gary Anandasangaree) எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், “தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன்.

கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி, இழப்பு, பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன்.

அன்பானவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் உண்மை மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுப்பதற்கும் சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும்.

எந்தவொரு கனேடியரும் தங்கள் தேசியம் அல்லது மதம் தொடர்பாக வெறுப்பை எதிர்கொள்ளக்கூடாது. அமைச்சர் ஆனந்தசங்கரி அளித்து வரும் மற்றும் தொடர்ந்து செய்து வரும் பங்களிப்புகளை எங்கள் அரசாங்கம் மிகவும் மதிக்கிறது,

மேலும் அமைச்சரவையில் அவரது பங்கில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமைச்சர் என்ற அவரது மரபு குறித்து நான் பெருமைப்படுகிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (14)
இலங்கையை உலுக்கிய வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்!
New Project t (3)
ரணிலை விக்ரமசிங்கவை கொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!
New Project t (12)
இந்தியாவில் இருந்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல்!
New Project t (12)
நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை!
New Project t (11)
இங்கிலாந்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்புக் கடிதம் போலியா? சிஐடி தீவிர விசாரணை
ranil-rishard sumu
ரணில் வீட்டிலா சுமந்திரன்!