🔴 PHOTO பாழடைந்த வீட்டிற்குள் சிக்கிய பல ஆண்டுகள் பழமையான எலும்புகூடு!

ஹைதராபாதில் பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்த நபர் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் இளைஞர்கள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த பாழடைந்த வீட்டுக்குள் பந்து விழுந்துள்ளது.

அதை எடுப்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில், அங்கு மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டுள்ளனர்.

இதையடுத்து, அதனை தனது தொலைபேசியில் புகைபடமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களுடன், அந்த பாழடைந்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்தநிலையில், அங்கிருந்த சமையல் அறையில் குப்புறபடுத்தநிலையில் எலும்புக்கூடு இருப்பதை கண்ட நிலையில் அது மட்கும் நிலையில் இருந்ததுள்ளது.

அதை சுற்றிலும் சமையல் பாத்திரங்கள் சிதறிக்கிடந்துள்ளதுடன் பழைய மாடல், நோக்கியா தொலைபேசி ஒன்றும் இருந்துள்ளது.

2016 இல் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும், தலையணை அடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி செயலிழந்த அந்த தொலைபேசியை காவல்துறையினர் பழுதுபார்த்த நிலையில், அதில், 2015 இல், 84 மிஸ்டு கால்கள் வந்தது பதிவாகியுள்ளது.

இது குறித்து, காவல்துறை உதவி கமிஷனர் கிஷன் குமார் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “உயிரிழந்தவரின் பெயர் அமீர் கான், அவர் வசித்த வீடு அவரது தந்தை முனீர் கான் என்பவருக்கு சொந்தமானது.

அவர் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுவதுடன் அவருக்கு 50 வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அவர், பத்து ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்திருக்க கூடும் என தடயவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொள்ளாததால் அவரது மரணம் குறித்து யாருக்கும் தெரியவில்லை

அந்த இடத்தில் ரத்தக் கறை எதுவும் தென்படவில்லை ஆகவே அவர் இயற்கையாக இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

எலும்புக்கூட்டின் விரலில் இருந்த மோதிரம், அணிந்திருந்த அரைக்கால் சட்டையை வைத்து, அது அமீர் கான் தான் என்பதை அவரது சகோதரர் ஷதாப் உறுதி செய்துள்ளார் எனினும், இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்ய பரிசோதனைகள் நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

air-india
நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்.. ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பித்தவருக்கு இப்படி ஒரு நிலையா?
malayagam
மலையக மக்களுக்கு இப்படி ஒரு கொடுமையா? போட்டுடைத்த சிறீதரன்!
New Project t (4)
முதல்தடவையாக 9A சித்தி பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை!
Northern Province, Sri Lanka
ஓஎல் பரீட்சையில் வடக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வந்தமை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
6726_14_2_2025_18_41_34_1_ARRIVALOFELECTRICITY01
78 ஆண்டுகளுக்குப் பின்னர் மின்சாரம் கிடைத்த கிராமம்!
15566990-air-india-
உலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!