தமிழர்பகுதியில் பாடசாலைக்கு அருகில் மீட்கப்பட்ட அதிகளவான துப்பாக்கி ரவைகள்!

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை கிளிநொச்சி பொலிசாரால் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை அதிகளவான துப்பாக்கி ரவைகள் சிதறி காணப்பட்டுள்ளது.

அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து,

அங்கு சென்றிருந்த பொலிசார், இராணுவம் சிதறி காணப்பட்ட ரவைகளை மீட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!