நீல நிற முட்டையிட்ட கோழி: ஆச்சரியத்தில் மக்கள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோழி ஒன்று நீல நிற முட்டையிட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தாவனகெரேயில், சன்னகிரி – நல்லூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது

தனது வாழ்வாதாரத்திற்காக கோழிகளை வளர்க்கும் நூர் என்பவரின் வீட்டில் கோழி ஒன்று மற்ற கோழிகளைப் போலல்லாமல் நீல நிற முட்டையை இட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் வைத்தியர் அசோக் கூறுகையில், “கோழியின் கணையத்தில் உள்ள ‘பிலிவர்டின்’ (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஒரு அரிய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (14)
இலங்கையை உலுக்கிய வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்!
New Project t (3)
ரணிலை விக்ரமசிங்கவை கொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!
New Project t (12)
இந்தியாவில் இருந்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல்!
New Project t (12)
நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை!
New Project t (11)
இங்கிலாந்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்புக் கடிதம் போலியா? சிஐடி தீவிர விசாரணை
ranil-rishard sumu
ரணில் வீட்டிலா சுமந்திரன்!