ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பாக பல்வேறு பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக அவர்கள் இருவரினதும் சொத்துகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தற்போதைய அரசின் ஆறு முக்கிய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமூக செயற்பாட்டாளர் ஜமுனி கமந்தவினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் பிமல் ரத்நாயக்க, சுனில் வட்டகல, சுனில் ஹந்துண்நெத்தி, நலிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க மற்றும் குமார ஜயக்கொடி ஆகிய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்ட சொத்து விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
காணி மற்றும் வீடுகள் – 40,000,000 ரூபாய், தங்கநகைகள் – 1,125,000 ரூபாய்
வாகனங்கள் – 15,000,000 ரூபாய், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -1,377,435 ரூபாய், மொத்த சொத்து மதிப்பு – 57,502,435 ரூபாய்
பிரதமர் ஹரிணி அமரசூரிய
காணி மற்றும் வீடுகள் – 10,555,615 ரூபாய் , தங்கநகைகள் – 7,000,000 ரூபாய்,
முதலீடுகள் – 6,842,604 ரூபாய், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -4,082,302 ரூபாய். மொத்த சொத்து மதிப்பு – 27,000,000 ரூபாய்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க
காணி மற்றும் வீடுகள் – 6,000,000 ரூபாய், தங்கநகைகள் – 1,310,000 ரூபாய், வாகனங்கள் – 15,000,000 ரூபாய். வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -2,745,794 ரூபாய், மொத்த சொத்து மதிப்பு – 25,000,000 ரூபாய்
அமைச்சர் விஜித ஹேரத்
காணி மற்றும் வீடுகள் – 10,007,000 ரூபாய், வாகனங்கள் – 27,000,000 ரூபாய், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -575,276 ரூபாய், மொத்த சொத்து மதிப்பு – 37,582,276 ரூபாய்
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
காணி மற்றும் வீடுகள் – 55,000,000 ரூபாய், தங்கநகைகள் – 3,100,000 ரூபாய்,
வாகனங்கள் – 21,300,000 ரூபாய், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 4,768,750 ரூபாய் மொத்த சொத்து மதிப்பு – 84,168,750 ரூபாய்
அமைச்சர் வசந்த சமரசிங்க
வணிக கட்டடங்கள் – 235,000,000 ரூபாய், காணி மற்றும் வீடுகள் – 10,000,000 ரூபாய், சூரிய மின்கல கட்டமைப்பு – 6,500,000 ரூபாய், தங்கநகைகள் – 4,550,000 ரூபாய்,
வாகனங்கள் – 15,000,000 ரூபாய் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 3,153,850 ரூபாய்
LOLC பங்குகள் – 21,000 ரூபாய், வருடாந்த வருமானம் – 15,300,000 ரூபாய், டிஜிட்டல் பணம் – 3,000 அமெரிக்க டொலர்
பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
காணி மற்றும் வீடுகள் – 76,000,000 ரூபாய் வருடாந்த வருமானம் – 9,678,185 ரூபாய்,
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 21,933,367 ரூபாய்.