மருத்துவர்கள், சட்டத்தரணிகளின் வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு!

அரச மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை (Vehicle Passes) நீக்குவதற்கு அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மருத்துவர்கள் சிரமமின்றி வைத்தியசாலைக்குள் நுழைய இது உதவும் என்பதால், மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டுகள் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

“மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டு அவசர காலங்களில் மட்டுமல்ல, சாதாரண கடமைகளுக்காக வைத்தியசாலைக்குள் நுழையும் போதும் முக்கியமானது.

வைத்தியசாலைக்குள் நுழையும் பல வாகனங்களில் மருத்துவர்களின் வாகனங்களை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களால் அடையாளம் காண முடியாது. இந்த அனுமதிச் சீட்டுகள் மூலம் அவர்கள் இலகுவாக அவ்வாறு அடையாளம் காணலாம்” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை நீக்குவது குறித்து காவல்துறையோ அல்லது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!