இலங்கையின் 2025 பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உயர்வு: ஜனாதிபதி நிர்வாகத்தின் கீழ் வலுவான மீட்சி!

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (மார்ச் 18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக மீட்சியடைந்து வருவதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP): 2018 – 2025

(மில்லியன் ரூபாய்களில் – 2015 நிலையான விலையில்)

ஆதாரம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் (DCS), இலங்கை

பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அம்சங்கள் கடந்த 2024 ஆம் ஆண்டில் 12.5 ட்ரில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட நிலையான விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 2025 இல் 13.1 ட்ரில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. அதேபோல் நடப்பு விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 32.7 ட்ரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

துறை ரீதியான முன்னேற்றம் நாட்டின் பிரதான பொருளாதாரத் துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்றுமே 2025 ஆம் ஆண்டில் நேர்மறையான வளர்ச்சியை எட்டியுள்ளன.

ஆதாரம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்
  1. தொழில் துறை: 7.8 சதவீத வளர்ச்சியுடன் மிகச்சிறந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக நிர்மாணத்துறை மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவை இதற்குப் பலம் சேர்த்துள்ளன.
  2. சேவை துறை: 3.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை இதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
  3. விவசாயத் துறை: சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் 1.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தென்னை மற்றும் நெல் உற்பத்தி இதில் முன்னிலை வகிக்கின்றன.

ஜனாதிபதி நிர்வாகத்தின் தாக்கம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ஜனாதிபதி முன்னெடுத்து வரும் சீர்திருத்தங்கள் மற்றும் முறையான நிதி முகாமைத்துவம் காரணமாகவே இந்த 5 சதவீத வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மற்றும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளன.

இருப்பினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாராந்த விடுமுறை போன்ற சவால்களுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு வளர்ச்சியைத் தக்கவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!