யாழ்தேவி புகையிரத தலைமை கட்டுப்பாட்டாளர் கைது!

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ புகையிரத்தின் தலைமை புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த புகையிரதம் , பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழ்தேவி புகையிரத்திற்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்