வெளிநாட்டு பெண்ணுக்கு பிரபல ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி!

கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்தச் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இந்த வெளிநாட்டுப் பெண் மற்றுமொரு பெண்ணுடன் குறித்த ஹோட்டலின் விசேட விருந்தினர் அறையில் தங்கியிருந்ததாகவும், அவரது பணப்பையில் இருந்த திராம் (Dirham) மற்றும் யூரோ (Euro) பணம் (இலங்கை மதிப்பில் ரூபா 330,000) காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாத நேரத்தில் இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணத்தை ஜ-எல பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் மாற்றி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!