ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
