நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் நாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பலர் உயிரை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள்.

இது மிகுந்த கவலைக்குரிய விடயம். உயிரிழந்தவர்களை திருப்பி தருவது என்ப இயலாதது. அதைவிட காணாமல் போனோரை எண்ணி, அவர்களது குடும்பத்தார் என்றாவது வருவார்கள் என்று தினம் தினம் வலியோடு கடக்க வேண்டிய நிலை இருக்கும். இதனை நாங்கள் கடந்த கால யுத்தத்தின் போது அதிகமாக உணர்ந்திருக்கின்றோம்.

இந்த அனர்த்தத்தின் போது இலங்கை மக்களின் முழுமையான மனிதாபிமானத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம்.

எந்தவொரு அனர்த்தத்தினாலும் வீழ்த்த முடியதாத உறுதியான மனிதாபிமானத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம். ஒரு நாட்டை கட்டியெழுப்ப மக்களின் அபிலாசைகளே முக்கியத்துவமிக்கது. நாட்டை மீட்டெடுக்க எமது இராணுவத்தினர் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கி துனிகரமான செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு நாம் அர்பணிப்புடன் செயற்படுகின்றோம். அனர்த்தத்தின் போது உயிர்கள் இழக்கப்படும்.

ஆனால் இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை எவ்வித அனர்த்தத்தாலும் தாக்க முடியாது.

எமது நாட்டின் சிறு பிள்ளைகள் தாங்கள் சேர்த்து வைத்த சிறு உண்டியலில் இருக்கும் பணத்தை நிவாரணப் பணிகளுக்காக கொடுத்திருக்கின்றனர். எமது நாட்டில் ஒரு தந்தை தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு வாழைக் குழையை நிவாரணமாக கொடுக்கத் தயாராக இருந்தார்.

இப்படி உறுதியான மனிதாபிமானமுடைய மக்களை எமது நாடு கொண்டிருக்கின்றது. இதுவே இலங்கையின் தற்போதைய உறுதிநிலை. மக்களின் தைரியம் மற்றும் விசுவாசம் இந்த நாட்டை கட்டியெழுப்பும்.

அதேசமயம், வெளிநாட்டில் இருக்கும் எமது இலங்கையர்கள் இரவு பகல் பாராது உழைத்து எமது தாய் நாட்டிற்காக பணி செய்கின்றனர். இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை என்று அறிவித்த போது, கேட்டதை விட பல மடங்கு இரத்ததானம் செய்தனர் எமது மக்கள்.

அழித்துவிட முடியாத உறுதியான மனிதாபிமானம் எம்மிடம் உள்ளது என்பதை எம்மக்கள் நிரூபித்தனர். ஆனால், நான் கண்டிருந்தேன் சில நபர்கள் அந்த மனிதாபிமானத்தை கேலிக்குட்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனர்.

கலாவேவ பகுதியில் வெள்ளத்தில் பேருந்தொன்று அடித்துச் செல்லப்பட்ட பிறகு அவர்களை காப்பாற்ற எமது படையினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், முகப்புத்தகத்தில் விமர்சிக்கும் பலர் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒரு முறை, இப்போது ஒரு மணித்தியாலம், இப்போது இரு மணித்தியாலம், இப்போது மூன்று மணித்தியாலம் என்று மீட்பு பணியை கேலிக்குட்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அப்போதும் எமது தாய் நாட்டின் படையினர் மீட்பு பணியை விடாது தொடர்ந்து அவர்களை மீட்டெடுத்தனர். துணிகரமான நடவடிக்கைகளை அப்போது கடற்படையினர் மேற்கொண்டு பேருந்தில் இருந்த அனைவரையும் ஒரு வீட்டின் கூரை மீது ஏற்றி காப்பாற்றினர்……..

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்