தையிட்டி விகாராதிபதி காணி குறித்து வெளியிட்டுள்ள கருத்து!

விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். திஸ்ஸ விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும் திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர் குறிப்பிட்டார்.

யாழ் – தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரருக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவங்ச நிகாய உத்தரலங்கா உப பிரதான சங்க நாயக்க பதவி ஞாயிற்றக்கிழமை (21) கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர்,

திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்சினை தோற்றம் பெறாத வகையில் தீர்வு காண்பது மிகவும் சிறந்ததாக அமையும்.

சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இந்த பிரச்சினைக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும்.

விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும்.

திஸ்ஸ விகாரையை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியான முரண்பாடுகள், பிரச்சினைகள் தோற்றம் பெறுவது முறையற்றது. இதற்கு உரிய தலைமைத்துவத்தின் ஊடாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும் என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!