கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது தோல்வியடைந்திருந்தது.

அன்றைய தினம் முதல் தடவையாக நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் மட்டுமே கிடைத்திருந்தன.

இவ்வாறான பின்னணியில், இன்றைய தினம் மீண்டும் ஒருமுறை கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலி பல்தசார் அவர்களால் வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில், கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்