வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளனர்.
ஏதேனும் அனர்த்த நிலை ஏற்படுமாயின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
